Thursday 20 September 2012

உங்களுக்கு பேரம் பேச தெரியுமா?

உங்களுக்கு பேரம் பேச தெரியுமா? தள்ளுவண்டியில் காய்கறி விற்கிறவரிடம் எட்டணா விலை குறைக்கச் சொல்லி அதட்டுவதில் ஆரம்பித்துப் பல நாடுகளுக்கு இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள்வரை எல்லாவற்றுக்கும் பேரம் பேசும் கலை அவசியப்படுகிறது. இதை சரியானபடி தெரிந்து கொண்டு பேசுபவர்கள் எந்த விவாதத்திலும் தோற்கமாட்டார்கள்.


...பேரம் பேசுவது, அதன் மூலம் நமக்கு வேண்டியவற்றை பெற்றுக் கொள்வதன் அடிப்படை நுட்பங்களை சொல்லித்தருகிற ஒரு நல்ல புத்தகம் "Negotiate To Win" இதனை எழுதியிருப்பவர் வாசிங்டனைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், ஜிம்தாமஸ்.
பேரம் பேசுவதன் மூலம் வெற்றிகளைப் பெற எளிய விதிமுறைகளை ஜிம்தாமஸ் பட்டியலிடுகிறார் அவை,


1 ஒரு விஷயத்தை பேரம் பேசுவதற்கு முன்னால் அதைப் பற்றி நன்றாக கேட்டு, படித்து, சிந்திதித்து தெரிந்துகொள்ளுங்கள்.


2 முடிந்தவரை எதிராளியை முதலில் பேச விடுங்கள். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


3 நீங்கள் ஒரு பொருளை 10 ரூபாய்க்கு விற்க நினைத்தால் 30 ரூபாயில் பேரத்தை ஆரம்பியுங்கள். அதே பொருளை நீங்கள் வாங்குவதானால் 4 ரூபாயில் பேச்சை தொடங்குங்கள்ம, அப்போது தான் இறுதியில் 10 ரூபாய்க்கு பேரம் முடியும்.


4 ஒரு வேலை எதிராளி பேரத்தை தொடங்கினால், அவர்கள் சொல்லும் தொகையைப் படாரென்று கீழே இறக்குங்கள்.


5 ஒரு வேளை எதிராளி சொல்லும் ஆரம்பத் தொகையே நியாயமாகத் தோன்றினாலும் அப்போதும் அதை சட்டென்று ஒப்புக்கொண்டுவிடக்கூடாது.


6 சில சமயத்தில் ஒரே நேரத்தில் பல விசயங்களைப்பற்றிப் பேரம் பேசவேண்டிய சூழ்நிலை ஏற்படும், அப்போது முதலில் சிக்கலில்லாத சிறிய விசயங்களைப் பற்றி பேசுங்கள்.


7 எந்த விவாதத்தின் போதும் ஆரம்பத்தில் நிறைய விசயங்களை விட்டுத்தருவதுபோல நடந்து கொண்டு நல்ல பெயர் வாங்குங்கள். எதிராளிக்கு உங்களைப் பிடித்துவிடும். நீங்கள் கையைப் பிடித்து முறுக்கினாலும் வலிக்காமல் சிரிப்பார்கள், சம்மதிப்பார்கள்.


8 பல விசயங்களை மொத்தமாக பெசிக்கொண்டிருக்கும்ப்போது இடையிடையே சில தற்காலிக தீர்வுகள் தோன்றும், அதில் திருப்தி அடையாதிர்கள்.


9 ஒரு மிகப் பெரிய பேரம் முடிவுக்கு வரும்போது, சட்டென்று சிரித்து கைகுலுக்கி விடாதிர்கள்.


10 எந்த பேரத்திலும் இது அல்லது அது தான் உள்ளது என்று நினைக்காதிர்கள், இவை இரண்டுக்கும் நடுவே மூன்றாவது ஒரு நல்ல தீர்வு இருக்கக்கூடும்.

No comments:

Post a Comment