Friday, 26 April 2013

வாழக்கை ஒரு விவசாயம்

நிலத்தில் பயிரிட நிலத்தைப் பண்படுத்த வேண்டும். அதுபோல, நம்பிக்கையை வளர்ப்பதற்கு மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். பொன்மொழிகளையும், போதனைகளையும் மனதில் விதைத்து, அவற்றை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள்.
ஒரு விவசாயி பயிரிடும் முன் என்ன செய்கிறார்? முதலில் நிலத்தில் இருக்கும் கற்களையும், குச்சிகளையும் பொறுக்கி எடுத்து மண்ணைப் பக்குவப்படுத்தி தரையை சமப்படுத்துகிறார், உழுகிறார், உரமிடுகிறார், நீர் பாய்ச்சுகிறார், அதன்பின்னரே நல்ல விதையை ஊன்றுகிறார்.
நம் வாழ்க்கையிலும், நாம் அத்தகைய தயாரிப்பைச் செய்ய வேண்டும். அறநூல்கள், ஞானிகள், முனிவர்களிடமிருந்து கற்ற கருத்துக்கள் விதைகளாக உள்ளன. அவற்றை விதைத்து வளருங்கள்.
அதை வளர்ப்பது எளிதன்று. முயற்சி தேவை. முயன்றால் முடியும். சிறிய செயல்களைச் செய்வதற்குக் கூட கடினமான உழைப்பு தேவையாக இருக்கிறது. நம்பிக்கை இருந்தால் எல்லாம் நிறைவேறும்.
உங்கள் உள்ளத்தில், நம்பிக்கையை வளர்க்க நீங்கள் முயலும்போது, நூற்றுக்கணக்கான தடைகள் குறுக்கிடும். சோதனைகள் வரும், பல சந்தேகங்கள் எழும். சாதாரண வாழ்வியல் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கே நிறைய பாடுபட வேண்டும் என்றால், உயர்ந்த லட்சியத்தை நிறைவேற்ற கடுமையான பாடுபட வேண்டியிருக்கும். ஏனெனில், லட்சியத்திற்கு தேவை நம்பிக்கை.
நீங்கள் ஒரு திட்டத்தைத் துவங்கி நடத்தும் போதும், “”இது வெற்றி பெறுமா? யோசித்தாயா?” என்றெல்லாம் பேசி, நம்பிக்கையை குலைப்பவர்களும் உண்டு.
செயல்களில் கவனம் செலுத்தும் போது, அவற்றில் இருந்து திசை திருப்பும் வகையில், பல கவர்ச்சிகள் நம்மை ஈர்க்கின்றன. இவற்றில் இருந்து வெளி வர வேண்டும்.
நம்பிக்கை உடையவர்களே! நாளைய உலகம் உங்கள் கையிலேயே சுழன்று கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment